×

கொளுத்தும் ேகாடை வெயிலை சமாளிக்க பெரம்பலூரில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு

பெரம்பலூர், மே 3: பெரம்பலூரில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க குவிக்கப் பட்டுள்ள நுங்கு விற்பனை அமோகம். சில மணி நேரங் களில் விற்றுத்தீர்கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாதபடிக்கு நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி தினமும் வெப்பத்தின் அளவு சதமடித்து, 100 டிகிரிக்குக் குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர், நீர் மோர், எலுமிச்சை சர்பத் மற்றும் ரசாயன குளிர் பானங்களை வாங்கிப் பருகுவதோடு,குளிர்ச்சியும் நீர்ச்சத்தும் கொண்ட தர்பூசணி பழங்களையும், முலாம் பழங்களையும், வெள்ளரிப்பிஞ்சுகளையும் வாங்கி சாப்பிட்டு சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு இயற்கை தந்த அருமருந்தாகிய நுங்கு விற்பனை பெரம்பலூரில் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் நுங்கினை ஆர்வமு டன் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சங்குப்பேட்டை, வெங்கடேச புரம் புது பஸ்டாண்டு, எளம்பலூர் சாலை, வடக்கு மாதவி சாலை ஆகியப் பகுதிகளில் சாக்கு மூட்டை களில் கொண்டு வந்து, சாலைஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நுங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்லுகின்றனர். உடலுக்கு 100 சதவீதம் குளிர்ச்சியைத் தரக்கூடிய உணவுப் பொருள் நுங்கு என்பதாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்ப தாலும் வியாபாரிகள் சொன்ன விலைக்குக் காத் திருந்து, வாங்கிச் செல்லு கின்றனர். இதனால் குவிக் கப்பட்ட நுங்கு ஒரு மணி நேரம், இரண்டுமணி நேரத் தில் விற்றுத் தீர்கின்றன.

The post கொளுத்தும் ேகாடை வெயிலை சமாளிக்க பெரம்பலூரில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Nungu ,Dinakaran ,
× RELATED பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை